Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் நிலையங்கள் அமைக்க E-Tender

மின் நிலையங்கள் அமைக்க E-Tender

கி.வாட், 22 கி.வாட் அளவிலான மின்திறன் கொண்ட 'ஸ்டாண்ட் அலோன்' சாதனங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு முழுவதும் மின் விநியோகத்தை சீராக்க மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்களை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தேவையான மின் தளவாடப் பொருட்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.

இதையத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்காடு, பெரிய கோளாப்பாடி, தொள்ளானந்தல், கோவூர், கேளூர் ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

வேலூர் மாவட்டத்தில் வளர்புரம், தெள்ளூர், ஆட்டுப்பாக்கம், விருப்பாட்சிபுரம், களாம்பட்டு, ஜக்கேரி, நொச்சிப்பட்டி, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மதுரை மாவட்டத்தில் மாத்தூர், பாப்பாப்பட்டி, கீழராமநதி ஆகிய இடங்களில் புதிய வெளிப்புற துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும் இது தவிர, 11 கி.வாட், 22 கி.வாட் அளவிலான மின்திறன் கொண்ட 'ஸ்டாண்ட் அலோன்' சாதனங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள ஒப்பந்ததாரர்கள் www.tnpdcl.org, www.tenders.tn.gov.in, மற்றும் www.tntenders.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு
அடுத்த செய்தி
மியாட் மருத்துவமனையில் உலக விபத்து காய தினம் அனுசரிப்பு

தொடர்புடைய செய்திகள்